About Us                                              Regd.No: 7cc/188

 

எமது சனசமூக நிலையம் 1965 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியது.சனசமூக நிலையத்தின் செயற்பட்டிற்காக தொல்புரம் கிழக்கு மாதர் சங்கமானது தனது கட்டடத்தை சனசமூக நிலையத்திற்கென சொந்தமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.அரைச்சுவர்களுடன் காணப்பட்ட கட்டடத்தை இன்று காணப்படும் தோற்றத்திற்குக் கொண்டு வருவதில் பாடுபட்டவர்கள் என்றும் எமது நன்றிக்குரியவர்களாவர்.     

எமது நிலைய வளர்ச்சிக்காகச்  செயற்பட்ட பலர் இன்று வெளிநாடுகளில் சனசமூக நிலையத்தின் நினைவுகளோடு வாழ்ந்து வருகின்றனர்.எமது பிரதேச மக்களினதும் வெளிநாட்டிலுள்ள எமது உறவுகளினதும் பங்களிப்புடன் எமது நிலையமானது தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்களின் திறனான வழிகாட்டலில் (24 வருடங்களாக நிலையத்தின் தலைவராக விளங்குபவர்) சிறந்ததொரு சனசமூக நிலையமாக விளங்குகின்றது.

   சனசமூக நிலையக்  கீதம்
வாழிய விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்  
வாழிய என்றென்றும்  வாழியவே

தொல்புரம்  கிழக்கில்  தூய நற்  செயல்களால்
தொண்டுகள்  புரிந்து துன்பத்தை விலக்கியே
கானமும் கவின் பெறு கலைகளை உயர்த்தியே
வாழிய என்றென்றும்  வாழியவே

வளர்புகழொடு வாசகர்  வட்டம்
வளமான நூல்களை வைத்தே நாளும்
அறிவு தன்னை ஆற்றலாக்கி நாட்டார்  கீர்த்தியை ஓங்கிடச்செய்து
வாழிய என்றென்றும்  வாழியவே

ஆரம்பக் கல்வியின் அவசியம் புரிந்தே
ஆளுமை நிறைந்த வகுப்பதையாக்கி
பாலர்கள்  கூடி படித்து மகிழ்ந்திட
பாடசாலை நடத்திடும்  நம் நிலையம் வாழியவே

துரையன் வளவு விநாயகன் துணையுடன்
தூயநல் பூதராசி அம்பாள் அருளால்
ஞாலமதைப் பெற்று விளங்கியே விக்கினேஸ்வரா
சனசமூக நிலையம் வாழியவே

அன்பான தலைவர் அழகான நிர்வாகம்
பண்பான மக்களின்  ஒத்துழைப்புடனே
பாரதில் ஒளியென ஞானத்தைப் பரப்பியே
வாழிய என்றென்றும்  வாழியவே
எமது நிலையத்தின் செயற்பாடுகள்


தினசரிப்பத்திரிகைகளை பொதுமக்கள் வாசித்துப் பயனடைய வழிசெய்தல்

இலவசமாக முன்பள்ளியை நடாத்தி சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்

சமூகச்சுடர் எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டு இலக்கியக் கலைத்துடிப்பு மிக்க இதயங்களுக்கு களம் அமைத்துக்கொடுத்து சமூகத்திலுள்ள விழுமியங்களை வெளிக்கொணரச் செய்தல்.

வேல்ட்விஷன் அமைப்பின் அனுசரணையுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்

பயனுள்ள நூல்களை  பொதுமக்கள் வாசித்துப் பயனடைய வழிசெய்தல்

சிரமதானப் பணிகளை மேற்கொண்டு பிரதேச அபிவிருத்திக்குப் பங்காற்றல்

விளையாட்டு உபகரணங்களை வழங்குவது உட்பட பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காகச் செயற்படல்.

பிரதேசத்தின் தேவைகளை இனங்கண்டு அவற்றை உரிய அரச நிறுவனங்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சுட்டிக்கட்டி அத்தேவைகளை நிறைவேற்றப் பாடுபடல்.

சமூகத்திலுள்ள பெரியோர்களைக் கௌரவித்தல்.

கலைவிழாக்களை நடாத்தி இளங்கலைஞர்களை ஊக்குவித்தல்

     வெளிநாட்டு உறவுகள் தாய் நாட்டிற்கு வருகின்றபொழுது      அவர்களை நிலையத்தில் வரவேற்று கௌரவித்தல்.

       நிர்வாக சபை - 2011         


                                                      தலைவர்:           திரு.தி.உதயசூரியன்  J.P

                                                      உப தலைவர்:   திரு.ச.கைலாசநாதன்

                                                      செயலாளர்:       திரு.ப.மதனகோபாலன்

                                                      உப செயலாளர்:  திரு.க.கணேசகுமாரன்

                                                      பொருளாளர்:     திரு.தி.வேலுப்பிள்ளை J.P

                                                      ஏனைய நிர்வாக உறுப்பினர்கள்:
                                                                                        திரு.ச.திருச்செல்வம்
             
                                                                                         திரு.சு.தியாகலிங்கம்
            
                                                                                         திரு.ந.புஸ்பகுமார்
   
                                                                                         திரு.த.கணேசு

                                                                                         திரு.மு.குணரத்தினம்
   
                                                                                         திருமதி.நில்மினி சயந்தன்
            
                                                                                         திரு.s.ஜனகன்
 
                                                                                         திரு.ச.நிருசாந்தன்   
   
                                                                                         திரு.சி.சிறீரங்கன்
                         
                                                                                         செல்வி.நா.ரஞ்சினி


                                                            கணக்காய்வாளர்:திரு.வே.சிவநேசன்


                                                           போசகர்கள்:     சிவசிறீ.சு.சுந்தரராஜக் குருக்கள்
 
                                                                                           திரு.பா.நாகேஸ்வரன்
     
                                                                                           திரு.மு.இராமலிங்கபிள்ளை

                                                           பத்திராதிபர்:      திரு.திரு.மா.சிவபாலன்
                                                           உப பத்திராதிபர்: திரு.ந.யுவதீபன்

                                                           நிலையப் பொறுப்பாளர்: திரு.த.கணேசு
                   நிர்வாக சபை - 2010          


                                                      தலைவர்:           திரு.தி.உதயசூரியன்  J.P

                                                      உப தலைவர்:   திரு.S.ஜனகன்

                                                      செயலாளர்:       திரு.ப.மதனகோபாலன்

                                                      உப செயலாளர்: திரு.க.பவகுகன்

                                                      பொருளாளர்:     திரு.தி.வேலுப்பிள்ளை J.P

                                                      ஏனைய நிர்வாக உறுப்பினர்கள்:
                                                                                        திரு.ச.திருச்செல்வம்
             
                                                                                         திரு.சு.தியாகலிங்கம்
            
                                                                                         திருமதி.நளாயினி நந்தகுமாரன்  J.P
   
                                                                                         திரு.த.கணேசு

                                                                                         திரு.க.கணேசகுமாரன்
   
                                                                                         திருமதி.நில்மினி சயந்தன்
            
                                                                                         திருமதி.P.சுயாத்தா
  
                                                                                         திரு.ச.நிருசாந்தன்   
   
                                                                                         திரு.ந.பிரதீபன்
   
                                                                                        திரு.சி.சிறீரங்கன்


                                                            கணக்காய்வாளர்:திரு.சி.சிறீரமணன்


                                                           போசகர்கள்:     சிவசிறீ.சு.சுந்தரராஜக் குருக்கள்
 
                                                                                           திரு.பா.நாகேஸ்வரன்
     
                                                                                           திரு.மு.இராமலிங்கபிள்ளை

                                                           பத்திராதிபர்:      திரு.தி.வேலுப்பிள்ளை J.P
                                                           உப பத்திராதிபர்: திரு.க.பவகுகன்

                                                           நிலையப் பொறுப்பாளர்: திரு.த.கணேசு

                      

                          தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்     
                                                                        

                                                                               அமைப்பு விதிகள்(யாப்பு)

பெயர்: தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்

முகவரி: விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்,     தொல்புரம் கிழக்கு,     சுழிபுரம்
                                                  

நிர்வாகப்பகுதி: தொல்புரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்தவர்களும் இப்பிரிவில் பரம்பரையாக வசித்து வேறுபிரிவுகளில் வசிக்கும் சந்ததியினரும்

பிரதேச அலுவலகம்: சுழிபுரம்

நோக்கங்கள்: நிர்வாகபிரதேசத்தினுள் கிராமங்களின் பொருளாதார, சமூக,கல்வி,கலாசார முன்னேற்றத்திற்கும் சமய எழுச்சிக்கும் குடியிருப்பவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை உடல்நலத்துடனும் பயன்தருவகையிலும் கழிப்பதற்கு இயலுமுகமாக விளையாட்டுக்களையும் ஏனைய பொழுதுபோக்குகளையும் ஏற்படுத்துவதற்கும் உழைத்தல்.

அங்கத்துவம்:இலங்கைப்பிரசையாகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்  மேற்படி நிர்வாகப்பகுதிகளில்  வசிப்பவராகவும் உள்ள இருபாலாரும்  இச்சனசமூக நிலயதில்
 அங்கத்துவம் பெற உரித்துடையவர்கள்.

இச்சனசமூக நிலையத்தில்  அங்கத்தவராக சேர விரும்பும் ஒருவர்  உரிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்திசெய்து செயலாளரிடம்  கொடுத்து நிர்வாகசப அங்கீகரித்த பின்பு சந்தாப்பணத்தைச் செலுத்தி அங்கத்தவராகலாம்.

பொதுச்ச்பைக்கூட்டத்தின்போது அவரின்  அங்கத்துவம்  முழுமையாக அங்கீகரிக்கப்படும்.


அங்கத்துவத்தை இழத்தல்: 1. அங்கத்தவர் காலமாதல்.
                                                               2.சனசமூகநிலையகுறிக்கோள்களுக்கு   முரணாக செயற்படல்செயற்படல்.இக்காரணத்திற்காக ஒருவர்    அங்கத்துவத்தை இழப்பதாயின்
 நிர்வாகசபையின் தீர்மானம் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

சந்தா:

அனைத்து அங்கத்தவர்களும் வருடாந்த சந்தாப்பணமாக ரூபா 60.00 செலுத்த வேண்டும்.  அல்லது ஆயுட்சந்தாவாக ரூபா 200.00 செலுத்த வேண்டும்.

       பூரணமாக வருட சந்தா  அல்லது ஆயுட்சந்தா செலுத்திய ஒருவர் நிலைய செயற்பாட்டில் கலந்துகொள்வதற்கு தகுதியுடையவராவார்.

பொதுச்சபை உறுப்பினர் கூட்டங்களுக்க சமூகமளிக்க முடியாதபட்சத்தில் தனது குடும்ப உறுப்பினரை கூட்டத்திற்கு தனது பிரதிநிதியாக அனுப்பலாம்.அவர் நிர்வாகசபைத் தெரிவிலோ அல்லது வாக்களிப்பிலோ கலந்துகொள்ள முடியாது.அவர் நிறைவெண்ணில் கருத்திலெடுக்கப்படுவார்.

நிர்வாக சபை:

இந்நிலையத்தின் நிர்வாக சபையில் பின்வரும் உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
    
தலைவர்........... 01

உபதலைவர்.......  01

செயலாளர்........  01

உப செயலாளர்....  01

பொருளாளர்......   01

நிர்வாக உறுப்பினர்.. 10

மொத்தம்.........   15


மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக கணக்குப்பரிசோதகர் ஒருவர் தெரிவுசெய்யப்படுதல் வேண்டும்.
இவர் நிர்வாகசபையில் இடம்பெறமாட்டார்.

போசகர்களாக மூவர் தெரிவு செய்யப்படுவர்.இவர்களும் நிர்வாகசபையில் இடம்பெறமாட்டார்கள்.

அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்களும் கணக்குப்பரிசோதகர்,போசகர்களும் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்படுவர்.

இத்தெரிவு வருடாவருடம் நடைபெறும்.

பதவியில் ஏற்படும் வெற்றிடங்களை வருடாந்த பொதுக்கூட்டங்கள் இரண்டிற்கிடையில் பொதுச்சபை அங்கத்தவர்களில் இருந்து தெரிவுசெய்யும் அதிகாரம் நிர்வாக சபைக்கு உண்டு.

நிர்வாக சபை தேவை ஏற்படும் பட்சத்தில் நிர்வாகசபை உறுப்பினர்களைக்கொண்ட உப குழுக்களை நியமிக்கலாம்.

வருடாந்த பொதுக்கூட்டம்:

ஒவ்வொரு வருடமும் மார்கழி 31ம் திகதிக்கு முன் 2 வாரகால அறிவித்தலுடன் நடைபெறும்.

   முன்  ஆண்டின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் கூட்ட அறிக்கை சமர்ப்பித்து அங்கீகரித்தல்.
 
    வருடாந்த செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல்

     வருடாந்த வரவு செலவுக்கணக்கு சமர்ப்பித்து அங்கீகரித்தல்.

    வருடாந்த பொதுக்கூட்டத்தில் நிர்வாகசபை உறுப்பினர்கள்,கணக்குப்பரிசோதகர்,போசகர்கள் பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்யப்படுவர்.

விசேட பொதுக்கூட்டம்:

விசேட முறையில் தீர்மானிக்க எத்தனிக்கும் ஒரு கோரிக்கை அல்லது சில கோரிக்கைகளை மட்டும் கவனத்திற்கொண்டு பார்ப்பதற்காக நிர்வாகசபை பணிக்கும் பட்சத்தில் அல்லது பொதுச்சபை உறுப்பினர்களில் 1/3 பங்கிற்கு குறையாத உறுப்பினர்களினால் கோரப்படும் ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் அல்லது பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரது எழுத்துமூல வேண்டுகோளின்பேரில் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்படலாம்.

வேண்டுகோள் விடுக்கப்பட்ட திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் இவ்விசேட பொதுக்கூட்டம் கூட்டப்படலாம்.

இவ்விசேட பொதுக்கூட்டம் எக்கோரிக்கைக்காக கூட்டப்பட்டதோ அவ்விடயத்தைத் தவிர வேறு விடயங்கள் பற்றி ஆராயப்படலாகாது.

நிர்வாகசபைக்கூட்டம்:

குறைந்த பட்சம் மாதத்தில் ஒரு தடவையாவது கூட்டப்படும். நிலையத்தின் நாளாந்த நடவடிக்கைகளை நடாத்திச்செல்வதில் பொறுப்பாக இருத்தல்.
எல்லா அம்சத்திலும் நிலையத்தின் நடவடிக்கைகளை சிறந்த முறையில் வழிநடத்துவதிலும் முன்னேற்றுவதிலும் நிர்வாகசபை பொறுப்பாக இருக்கும்.

கூட்டங்களை நடாத்துதல்:

வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறும் திகதி நிர்வாகசபையால் தீர்மானிக்கப்படும்.

வருடாந்த பொதுக்கூட்டத்திற்கான நிறைவெண்ணானது முழு பொதுச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 அல்லது அதற்கு குறைவாயின் 1/3 பகுதியினர் பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.
முழு பொதுச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 அல்லது அதற்கு அதிகமாயின் 30 உறுப்பினர்கள் பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

விசேட பொதுக்கூட்டத்திற்கும் அவ்வாறே அமையும்.

நிர்வாகசபைக்கூட்டத்திற்கும் உப குழுக்களின் கூட்டத்திற்கும் நிறைவெண்ணானது நிர்வாகசபை அல்லது உபகுழுவின்
உறுப்பினரில் அரைவாசிக்கு அதிகமாயிருத்தல் வேண்டும்.

கூட்டங்களின் அறிவித்தலும் நிகழ்ச்சிநிரலும் அவ்வவ் கூட்ட உறுப்பினர்கள் அறிந்துகொள்ளக்கூடிய முறையில் ஒழுங்குசெய்தல் வேண்டும்.

 வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு கிழமை(14 நாட்கள்)முன்னறிவித்தல்  கொடுக்கப்பட வேண்டும்.

 விசேட பொதுக்கூட்டத்திற்க ஒரு கிழமை (7 நாட்கள்)முன்னறிவித்தல்  கொடுக்கப்பட வேண்டும்.

நிர்வாகசபைக்கூட்டத்திற்கு 03 நாட்கள் முன்னறிவித்தல் போதுமானதாகும்.


நிர்வாகசபை உறுப்பினர்களின் கடமைகள்:

தலைவர்:

01)நிலையத்தின் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும் தலைவர் எல்லாச் சபைக்கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார்.அவர் இல்லாதவிடத்து உப தலைவர் அவர்களும் அவரும் இல்லாதவிடத்து நிர்வாக சபையிலிருந்து தெரிவு செய்யப்படும் ஒருவர் தலைமை தாங்குவார்.

02)நிலையம் சம்பந்தமான சகல நடவடிக்கைகளுக்கும்  நிலையத்திற்கும் அதன வளர்ச்சிக்கும் பெருமைக்கும் ஆவன புரிதல்.

செயலாளர்:

நிலையத்தின் செயலாளர் எல்லாச் சபைக்கூட்டங்களுக்கும் செயலாளராகச் செயலாற்றுவார்.

பொதுக்கூட்டத்திற்கு,நிர்வாகசபைக்கூட்டத்திற்கு அறிவித்தல் கொடுத்தல்.அரைப்பங்கிற்கு மேற்பட்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அழைக்கும் சமயத்தில் செயலாளரினால் அல்லது தலைவரினால் நிர்வாகசபை கூட்டப்படும்.

நிர்வாகசபையின் தீர்மானங்கள் யாவும் செயல்முறையில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விதிகளுக்கு அமைய எடுத்தல்.

கூட்டநிகழ்ச்சி வரலாறுகளையும் தீர்மானங்களையும் புத்தகங்களில் பதிந்து வைத்து கூட்டங்களுக்கு சமர்ப்பித்து சபையில் அங்கீகாரத்தைப் பெறல்.

நிலையத்தின் நிர்வாகசபை தொடர்பாக எல்லாக் கடிதத்தொடர்புகள்,ஆவணங்கள்,கோவைகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.

பொருளாளர்:

நிலையத்திற்கு வழங்கப்படும் உபகரிப்புகள்,நன்கொடைகள்,பணம்,பொருள் மற்றும் எல்லாவிதமான வரவுகளுக்கும் சகலவிதமான செலவீனங்களுக்கும் கணக்குகளைப் பேணுதல்.


நிலையத்திற்கு வழங்கப்படும்,பெறப்படும் தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை உரிய இடாப்பில் குறித்துப் பேணுதல்,அவற்றின் பட்டியல் மூலம் ஆண்டுதோறும் சரிபார்த்து அடுத்த பொதுகூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்தல்.

நிலையத்தின் எல்லாவித செலவினங்களுக்கும் வேண்டிய சான்றிதழை நிர்வாகசபைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெறல்.

பொருளாளர் கையிருப்பில் ரூபா 2000.00 தொகையினை மட்டும் நடைமுறைச் செலவினங்களுக்காக வைத்திருக்கலாம்.மேலதிக நிதியினை வங்கியில் வைப்பிலிட வேண்டும்.வங்கியில் வைப்பிலி முடியாத சந்தர்ப்பத்தில் தலைவருக்கு அறிவித்து அனுமதி பெறல் வேண்டும்.(காலத்திற்குக் காலம் இத்தொகை மாற்றப்படலாம்.)

நிலையத்தின் நிதியையும் புத்தகங்களையும் தேவையான நேரங்களில் பரிசீலனை செய்வதற்கு தலைவருக்கு அல்லது கணக்காய்வாளருக்கு அல்லது பொதுச்சபையால் அதிகாரமளிக்கப்பட்டவருக்கு/வர்களுக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு நிர்வாகசபைக்கூட்டத்திலும் நிலையத்தின் வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பித்து அக்கூட்டத்தில் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

உப தலைவர்:

தலைவர் இல்லாத சமயத்தில் அவருக்காக அவரின் கடமைகளை பொறுப்பேற்று நிலையக்கருமங்களை புரிதல்.

உப செயலாளர்:

செயலாளரின் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவியாக இருப்பதுடன் நிர்வாக சபையின் பணிப்புகளின் பிரகாரம் கருமங்களை ஆற்றுதல்.செயலாளர் இல்லாத சமயத்தில் அவருக்காக அவரின் கடமைகளைப் புரிதல்.

ஏனைய நிர்வாகசபை உறுப்பினர்களின் கடமைகள்:

நிலையத்தின் நோக்கங்களை பூர்த்திசெய்யுமுகமாக கடமைகளைச் சரிவர நிறைவேற்ற உதவியாக இருப்பதுடன் நிர்வாகசபையின் பணிப்புகளை நிறைவேற்றல்.

சனசமூக நிலையத்தின் அதிகாரங்களும் கடமைகளும்:

நிலையத்தின் செயற்றிட்டங்களை உருவாக்குதல்,செயற்படுத்தல். நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய எக்காரியத்தையும் செய்தல்.பொருள்,நிதி சேகரித்தல்,செலவு செய்தல் முதலியன யாவும் இச்சபையின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

யாப்பில் எதேனும் ஒரு பிரிவில்/ பகுதியில்/துணைவிதியில்  திருத்தம் செய்தல்,நிராகரித்தல்,புதிதாக அறிமுகஞ்செய்தல் வேண்டுமெனில் பொது/விசேட பொதுக்கூட்ட உறுப்பினர்களில் 2/3 க்கு குறையாத வாக்குகளினால் அனுமதிக்கப்படும்.

ஏதேனும் ஒரு விடயம் தொடர்பில் விசேடமான ஏற்பாடுகள் இல்லாவிட்டால் நிர்வாக சபையின் தீர்மானம் வருடாந்த பொதுக்கூட்டத்திலோ அல்லது யாப்பு திருத்துவதற்கான விசேட பொதுக்கூட்டத்திலோ அங்கீகரிக்கப்படும் வரை நிர்வாகசபையின் தீர்மானமே இறுதியானதாகும்.

நிலையத்தினால் பேணவேண்டிய பதிவேடுகள்:

நிர்வாகசபையின் பொறுப்பில் பின்வரும் பதிவுப்புத்தகங்கள் பேணப்படல் வேண்டும்.

1. நிலையத்தின் அசைவற்ற ஆதன விபரம்.
2. நிலையத்தின் அசைவுள்ள பொருட்கள்.
3. அங்கத்தவர் பட்டியல்.
4. காசுப்புத்தகம்.
5. வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கை,விசேட பொதுக்கூட்ட      அறிக்கை,நிர்வாகசபைக்கூட்ட அறிக்கைப் புத்தகம்.

                                                                                         *****************

 
 
 
Make a Free Website with Yola.