க.பொ.த(உ/த)பரீட்சை - 2009 இல் யாழ் மாவட்டத்தில் 2ஆம் இடமும் தேசிய மட்டத்தில் முன்னணி இடமும் பெற்று கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது கிராமத்தைச் சேர்ந்த திரு.பத்மநேசன் பிரகாஸ் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு எமது நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு தலைமை தாங்கி நிலைய உப தலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலைய உபதலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்கள் திரு.ப.பிரகாஸ் அவர்களுக்கு மாலை அணிவித்துக் கௌரவிக்கிறார்.
நிலைய உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
ஒய்வுபெற்ற மக்கள் வங்கி உயர் அதிகாரி திரு.து.ரகு அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
யாழ் தேசியக் கல்வியியற் கல்லூர உபபீடாதிபதி திரு.பா.தனபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
யாழ் தேசியக் கல்வியியற் கல்லூர உபபீடாதிபதி திரு.பா.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.
ஒய்வுபெற்ற மக்கள் வங்கி உயர் அதிகாரி திரு.து.ரகு அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கிறார்.
மருத்துவபீட மாணவன் திரு.ப.பிரகாஸ் அவர்கள் பதிலுரை வழங்குகிறார்.
நிலையத்தின் செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.
மருத்துவபீட மாணவன் திரு.ப.பிரகாஸ் அவர்களுடன் நிலைய உறுப்பினர்கள்.