கல்வி


ஒரு சிசு தாய்வயிற்றின் உலகில் கற்றது  அது கல்வி
பிறந்த குழந்தை வாழ்க்கையில் கற்கும் நல்லொழுக்கம் அது கல்வி
அன்னை நினைவுகாட்டி உணவூட்டும் போஷாக்கு அது கல்வி
குழந்தை முன்பள்ளியில் சுதந்திரமாய் விளையாடிச் சொல்லும் கதை
                                                                                                                                   அது கல்வி
பெற்றோரை வணங்கி ஆசீர்வாதம் பெறுவது  அது கல்வி
பாடசாலையில் குருவிடம் குழந்தை கற்பது  அது கல்வி
உடல் அப்பியாசம் செய்து தண்ணீரில் விளையாட்டுக்கற்பது
                                                                                                              அது கல்வி
பசைகொண்டு உருவத்தில்  பருப்பு ஒட்டிக்கற்பது  அது கல்வி
சித்திரங்கள் கீறி பல நிறம் தீட்டும் ஆக்கத்திறன்  அது கல்வி
சந்தை விளையாட்டுடன் மண்சோறு கறி சமைத்து கேட்கும் கேள்வி
                                                                                                                                 அது கல்வி
கடதாசியில் பலவடிவங்கள் வெட்டி ஒட்டும் ஒட்டுச் சித்திரங்கள்
                                                                                                                கற்பது  அது கல்வி
கல்வி உபகரணங்கள்  எடுத்துக்கற்கும் குழந்தையின் திறன் அது கல்வி
குழந்தையின் எண்ணக்கரு இனங்கண்டு ஆசிரியர் தட்டிக்கொடுக்குந் திறன்                                                 
                                                                                                                                             அது கல்வி
ஆலயம் சென்று வழிபட்டு மனம் பரிபக்குவம் அடைவது அது கல்வி
பாடசாலைமாணவன் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரி ஆவது
                                                                                                                                              அது கல்வி
விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் விமானத்தில் விண்ணுலகம் சென்று வருவது அது கல்வி
மனிதன் உலகத்தைச் சுற்றிவரும் மூன்று எழுத்து
                                   "கல்வி","கல்வி","கல்வி"

                                                              ஆக்கம் -   
                              செல்வி.வே.திலகவதி(ஆசிரியர்)

 
Make a Free Website with Yola.