அன்பு
காசு கொடுத்துப் பெறுவதும் இல்லை.
கடையில் வாங்குவதும் இல்லை.
ஆசை வார்த்தை பேசிப் பெறுவதும் இல்லை.
அழுதால் கிடைப்பதும் இல்லை.
அதட்டி மிரட்டிப் பெறுவதும் இல்லை.
அடித்துப் பெறுவதும் இல்லை.
பதவியைக் காட்டிப் பெறுவதும் இல்லை.
பகட்டுக் கவர்ச்சியும் இல்லை.
மயல் விழி அசைவில் உடல் சுகம் தேடி
மயங்கும் உணர்வும் இல்லை.
இயல்பாய் இதயத்தில் உதித்தால்
இன்பம் சேர்க்கும் உணர்வே அன்பு.
எதிர்பார்ப்பின்றி இதயங்கள் இரண்டை
ஒன்றாய் இணைப்பது அன்பு.
உயர்ந்தோர் கீழோர் பேதமில்லாமல்
உதிக்கும் உணர்வே அன்பு.
மழைநீர் பயிருக்கு உகந்தது போல்
எம்மனதுக்கு உகந்தது அன்பு.
ஆக்கம்
திரு.கு.யசிந்தன்