அருள் ஆசிச் செய்தி

சமய சமூக சேவையாளர்களே!
     தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஆதரவில் வெளியிடப்படும் சமூகச் சுடர் சஞ்சிகைக்கு அருள் ஆசிச் செய்தி வழங்குவதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன்.
     இங்கு விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான் பெயரில் சனசமூகநிலையமும் பாடசாலையும் அமைந்ததுள்ளது இப்பகுதி மக்கள் செய்த மஹா புண்ணியப்பேறாகும்.
     இப்பகுதி மக்கள் ஆனந்த வாழ்வும் ஆத்ம திருப்தியும் ஆன்மீக வாழ்வொன்றினால் மட்டுமே பெற முடியும் என்ற மன நம்பிக்கையுடன் வாழ்பவர்கள். 

       தொல்புரம் கிராமம் ஆதியும் அந்தமும் இல்லாத சைவம் - சமய - சமூகப்பணிகள் காப்பதற்கு அன்று தொட்டு இன்று வரை புனிதமாகப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வளர்ந்து நல்நிலை அடைந்து வருவது உண்மையில் பாராட்டுக்குரியது.
    அடியேன் பிறந்த மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தின் புனிதமான கல்வி,சமய,சமூகப்பணிகள் தொடர்ந்து பல்லாண்டுகாலம் ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி சிறக்க அடியேனதும் பேரவையினதும் சம்மேளத்தினதும் நல்வாழ்த்தும் அருள் ஆசிச் செய்தியையும் சமர்ப்பித்து எல்லோரும் மண்ணில் தெய்வீக சிந்தனை,தொண்டு செய்யும் உள்ளத்துடன் நல்லவண்ணம் வாழ இறை ஆசி வேண்டி உள் அன்புடன் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
                                                                           "என்றும் வேண்டும் இன்ப அன்பு"


                                                                                                                              "சமூகமணி","சிவஞானச்செல்வர்"    
                                                                                                                             சி.சி.வரதராசா  சமாதான நீதவான்     
                                                                                                                                   கௌரவ பொதுச்செயலாளர்
                                                                                                           யாழ் இந்து இளைஞர் பேரவை(யாழ் மாவட்டம்)
                                                                                                                                          கௌரவ காப்பாளர்
                                                                                                     யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனம்

 
Make a Free Website with Yola.